Monday, 24 June 2013

சொல்ல மறந்த குறிப்புகள் .

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள்  --சில குறிப்புகள்

0 2013 பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்ற
பொன்னன் விடுதி ,மோளுடயான் பட்டி கிருஷ்ணாஜிபட்டினம்  சூரன் விடுதி,  மதிய நல்லூர்,ராசியமங்கலம்,
திருவப்பூர்  எஸ் .குளவாய்ப்பட்டி   ஆகிய கிராமங்களின் அரசு உயர்நிலைப்பள்ளிகள் தொடக்க பள்ளியோடு ஒண்டிக்கொண்டு இயங்குகின்றன.  உயர்நிலைப்பள்ளிக்கென்று கட்டிட வசதி இல்லாததால் பெரும்பாலான வகுப்புகள் மரத்தடியில் நடக்கின்றன .(மழைக்காலத்தில் ?!)

0 ஆயிங்குடி (தெற்கு )அரசு  உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி( 2013 ) பெற்றுள்ளது .இக்கிராமம்  போக்குவரத்து வசதி இல்லாத உள்  கிராமம்.5 கி மீ கடந்து  பேருந்துசெல்லும்  சாலைக்கு வரவேண்டும் .
இப்பள்ளியில் அறிவியல் பாடத்தில் 15 பேர் 100/100 பெற்றுள்ளனர் .
அறிவியல் ஆசிரியர் திரு கலந்தர் அவர்களைப் பாராட்டுவோம் .

0 முக்கிய தடங்களிலிருந்து ஒதுங்கிய கிராமமான கொத்தமங்கலம் அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து   7 வருடங்களாக 10ஆம் நிலையில்  100% தேர்ச்சியை பெற்று வருகிறது .

0 எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத குலமங்கலம் (வடக்கு) அரசு உயர்நிலைப்பள்ளி மனவளர்ச்சி குறைவான (45% ) ஒரு மாணவனையும் சேர்த்து 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

0 .புதுக்கோட்டை மாவட்டத்தில்  பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 79.அதில் அரசுப்பள்ளிகள் 19.
அந்த அரசுப் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியே கட்டிட வசதி
இல்லாமல்   தொடக்க பள்ளியோடு ஒண்டிக்கொண்டு  இயங்கும் பள்ளிகள் 8.


7 comments:

  1. அடர்ந்து வரும் இடர்களுக்கிடையேயும் முழுத்தேர்ச்சி பெற்ற அந்த 19 அரசு உயர்நிலைப் பள்ளிகளும் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையால் கடந்த சூலை 20 ஆம் நாள் விருது வழங்கிப் பாராட்டப்பட்டன. வெற்றிக்கு உழைத்த அவ்வப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.-- பாவலர் பொன்.க.

    ReplyDelete
  2. பாவலர் பொன். க அய்யாவின் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் .

    ReplyDelete
  3. Thank u for your compliments Mr. Jeyam selvakumar.

    ReplyDelete
  4. அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. congradulations sir..where there is a will there is a way.we have to find that way as teacher and as a public.thank u for ur information.

    ReplyDelete
  6. பள்ளிகளின்மேல் கல்வித்துறையின் பார்வை படட்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் தகுதியான தகவலைப் பகிர்ந்து கொண்ட ராசி.ப. அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete