Sunday, 27 September 2015

சொல்ல மறந்த குறிப்புகள் -2

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  RMSA திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட  
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில்( 2015) 
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் .

1. அரசு உயர்நிலைப்பள்ளி , கல்குடி   
2.அரசு உயர்நிலைப்பள்ளி ,  கே. வி .கோட்டை    
3.அரசு உயர்நிலைப்பள்ளி , தாழனூர்    
4.அரசு உயர்நிலைப்பள்ளி , குடுமியான்மலை    
5.அரசு உயர்நிலைப்பள்ளி , காயாம்பட்டி   
6.அரசு உயர்நிலைப்பள்ளி , வார்பட்டு    
7.அரசு உயர்நிலைப்பள்ளி , அரசர்குளம்( கி   )
8.அரசு உயர்நிலைப்பள்ளி , பொய்யாதனல்லூர்    
9.அரசு உயர்நிலைப்பள்ளி , திருமணஞ்சேரி   
10 அரசு உயர்நிலைப்பள்ளி , கோலேந்திரம்   
11.அரசு உயர்நிலைப்பள்ளி , சூரன் விடுதி    
12.அரசு உயர்நிலைப்பள்ளி , ராசிய மங்கலம்   
13.அரசு உயர்நிலைப்பள்ளி , திருநல்லூர்    
14.அரசு உயர்நிலைப்பள்ளி , நார்த்தாமலை   
15.அரசு உயர்நிலைப்பள்ளி , வடசேரிப்பட்டி    
16அரசு உயர்நிலைப்பள்ளி , மதியனல்லூர்    
17.அரசு உயர்நிலைப்பள்ளி , பாலன்நகர்   
18.அரசு உயர்நிலைப்பள்ளி , துலையானூர்  

குறிப்பு : இப்பள்ளிகளில் கல்குடி, கே வி கோட்டை , ஆகிய இரண்டு பள்ளிகள் 
தவிர மீதமுள்ள 16 பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியாக கட்டிட  வசதி ஏதும் இல்லை . தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே ஓரிரு வகுப்பறைகளில் ஒண்டிக்கொண்டு இயங்கும் பள்ளிகள் அவை . 








Monday, 24 June 2013

சொல்ல மறந்த குறிப்புகள் .

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள்  --சில குறிப்புகள்

0 2013 பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்ற
பொன்னன் விடுதி ,மோளுடயான் பட்டி கிருஷ்ணாஜிபட்டினம்  சூரன் விடுதி,  மதிய நல்லூர்,ராசியமங்கலம்,
திருவப்பூர்  எஸ் .குளவாய்ப்பட்டி   ஆகிய கிராமங்களின் அரசு உயர்நிலைப்பள்ளிகள் தொடக்க பள்ளியோடு ஒண்டிக்கொண்டு இயங்குகின்றன.  உயர்நிலைப்பள்ளிக்கென்று கட்டிட வசதி இல்லாததால் பெரும்பாலான வகுப்புகள் மரத்தடியில் நடக்கின்றன .(மழைக்காலத்தில் ?!)

0 ஆயிங்குடி (தெற்கு )அரசு  உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி( 2013 ) பெற்றுள்ளது .இக்கிராமம்  போக்குவரத்து வசதி இல்லாத உள்  கிராமம்.5 கி மீ கடந்து  பேருந்துசெல்லும்  சாலைக்கு வரவேண்டும் .
இப்பள்ளியில் அறிவியல் பாடத்தில் 15 பேர் 100/100 பெற்றுள்ளனர் .
அறிவியல் ஆசிரியர் திரு கலந்தர் அவர்களைப் பாராட்டுவோம் .

0 முக்கிய தடங்களிலிருந்து ஒதுங்கிய கிராமமான கொத்தமங்கலம் அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து   7 வருடங்களாக 10ஆம் நிலையில்  100% தேர்ச்சியை பெற்று வருகிறது .

0 எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத குலமங்கலம் (வடக்கு) அரசு உயர்நிலைப்பள்ளி மனவளர்ச்சி குறைவான (45% ) ஒரு மாணவனையும் சேர்த்து 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

0 .புதுக்கோட்டை மாவட்டத்தில்  பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 79.அதில் அரசுப்பள்ளிகள் 19.
அந்த அரசுப் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியே கட்டிட வசதி
இல்லாமல்   தொடக்க பள்ளியோடு ஒண்டிக்கொண்டு  இயங்கும் பள்ளிகள் 8.


Friday, 2 March 2012

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்விமுறை

          பாவ்லோ     பிரையிரே 


 பாவ்லோ பிரையிரே  (PAU LO FREIRE)
 பாவ்லோ பிரையிரே பிரேசிலின் ரெசிப் மாநிலத்தில்( 19.09.1921  )
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்  .  வறுமை நிறைந்த வாழ்வனுபவங்கள்
அவரைச் செதுக்கின .